கமலின் கட்சி கொடியின் ரகசியம் இதுதான்!

  • 6 years ago
கமலின் கட்சியின் கொடியில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் எதை உணர்த்துகிறது என்று பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. தற்போது கமல் அதன் அர்த்தத்தை விளக்கியுள்ளார். கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்தே தான் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்த போதிலிருந்தே அவர் இடதுசாரி தலைவர்களை சந்தித்து வந்தார்.

இதனால் அவரது முகம் கம்யூனிஸமாக இருக்கலாம் என்ற பேச்சு நிலவியது. எனினும் அவர் திராவிடக் கட்சியைச் சேர்ந்த கருணாநிதியையும் சந்தித்தார். இதனால் அந்த யூகத்தில் குழப்பம் நிலவியது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள கட்சியின் கொடியில் 3 ஜோடி சிவப்பு கைகளும், 3 ஜோடி வெள்ளை கைகளும் நடுவே கருப்பு வளையத்தில் வெள்ளை கைகளும் ஜோடியாக உள்ளன.

Kamal hassan's party's flag ensures the workers and owning people are the same.

Recommended