உலக நாயகன் கடந்து வந்த பாதை இதோ...வீடியோ

  • 6 years ago
கமல்ஹாசன் நடிகராக அறிமுகமாகி தற்போது 63 வயதில் அரசியல்வாதியாக உருவெடுத்தது வரை அவர் பயணத்தில் சில முக்கியமான நிகழ்வுகளை பற்றிய தொகுப்பு. நடிகர் கமல்ஹாசன் கடந்த 1954-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தார். அய்யங்கார குடும்பத்தில் பிறந்த அவரது தந்தை சீனிவாசன் ஒரு வழக்கறிஞராக இருந்தார். தாய் ராஜலட்சுமி. தனது தொடக்கக் கல்வியை பரமக்குடியில் முடித்த கமல், தனது குடும்பத்துடன் சென்னை நோக்கி சென்றார்.

அவரது தாய் ராஜலட்சுமி, ஏவிஎம் செட்டியாரின் மனைவி பார்ப்பதற்காக கமல்ஹாசனுடன் சென்றார். அப்போது அவரது நடத்தையால் வியந்த எம்.சரவணன் அவர்களது தயாரிப்பான களத்தூர் கண்ணம்மாவில் நடிப்பதற்காக கமலை பரிந்துரைத்தார். அன்று தொடங்கியதுதான் கமலின் திரைப்பயணம், இன்று வரை அலைகள் ஓய்வதில்லை போல் ஓடி கொண்டே இருக்கிறது.


A series of journey who is well known as Actor Kamal Hassan now turned into politician.

Recommended