பிரபல நடிகை முன்பு சுயஇன்பம் அனுபவித்த டிரைவர்

  • 6 years ago
பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி நடிகரும், மாடலுமான சுமீத் ராகவன் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். அவரின் மனைவி சின்மயி சுர்வே மராத்தி படங்கள், டிவி சீரியல்கள், மேடை நாடகங்களில் நடித்து வருகிறார்.
மராத்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர் சின்மயி.
மும்பை விலே பார்லே பகுதியில் உள்ள பார்லே திலக் வித்யாலயா பள்ளி அருகே ஒரு வெள்ளை நிற பி.எம்.டபுள்யூ. காரில் சபாரி உடை அணிந்திருந்த டிரைவர் வாகனத்தை விட்டு வெளியே வந்து சின்மயி கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்துள்ளார்.
டிரைவர் செய்த காரியத்தால் அதிர்ச்சி அடைந்த சின்மயி அவரை ஓங்கி அறைய முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டார்.
வீட்டிற்கு சென்ற சின்மயி நடந்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். உடனே ராகவன் விலே பார்லே காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் கொடுத்தார். காரின் எண் 1985 என்பதை மட்டும் சின்மயி கவனித்ததையும் ராகவன் போலீசாரிடம் தெரிவித்தார்.
ராகவன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டே மணிநேரத்தில் அந்த டிரைவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் ஜீவன் சவுத்ரி(42) என்று தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
முன்னதாக வித்யா பாலன் ரயிலில் சென்றபோது ஒருவர் அவர் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்ததாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் சின்மயி கண் முன்பும் அந்த கொடுமை நடந்துள்ளது.

In a shocking turn of events, Sarabhai vs Sarabhai actor, Sumeet Raghavan's wife, Chinmayee Surve, who is a noted Marathi actress, had to face a rather disturbing incident. The actress, who was out for work, was left shaken as a man came out of a BMW masturbated in front of her! Before she could react, he fled the place.

Recommended