இரும்புத்திரை இப்போ லைகா கைவசம்

  • 6 years ago
தமிழ் சினிமாவின் முக்கிய படங்களையும் பெரிய படங்களையும் தங்கள் நிறுவனம் கீழ் கொண்டு வந்துவிடுகிறது லைக்கா. அந்த வகையில் முதன்முறையாக விஷாலின் படத்தை வெளியிடவிருப்பதாக ஒரு செய்தி வருகிறது. விஷால், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் இரும்புத்திரை. அர்ஜுன் வில்லனாக நடித்து இருக்கிறார். ஜனவரி 26 இல் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டிருந்த இரும்புத்திரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிப்போடப்படுள்ளது. மார்ச் இறுதி அல்லது ஏப்ரலில் வெளியாகலாம் என்கிறார்கள். இரும்புத்திரை படத்தை லைக்கா நிறுவனம் வெளியிடவிருப்பதாகவும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். விஷால் பட வெளியீட்டை தள்ளி வைத்ததிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது.


Souces say that Vishal's Irumbuthirai may be releasing under Lyca Banner.

Recommended