மூன்று மொழிகளில் உருவாகும் சிவா கார்த்திகேயனின் படம் !

  • 6 years ago
தமிழ் ஹீரோக்கள் முன்னணியில் இருக்கும்போது ஏற்படும் ஆசைதான் சிவகார்த்திகேயனுக்கும் உண்டாகி இருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும். சிவகார்த்திகேயன் இப்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். டுத்து இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் ஏலியனை அடிப்படையாகக் கொண்ட கதை என்றும் சிவாவே ஏலியனாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தைதான் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் எடுக்கத் திட்டமிடுகிறார்களாம். அதனால்தான் ஏ ஆர் ரஹ்மானை இசைக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். மற்ற டெக்னிஷியன்களையும் அதற்கு தகுந்தாற்போல் பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம். நோட் பண்ணுங்க... தனுஷ் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். சிவா ஹாலிவுட் படத்தையே தயாரித்து நடிக்கப் போகிறார்.


Sources say that Sivakarthikeyan's next movie will be a tri lingual in Tamil, Hindi and English.

Recommended