தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் ஐ டி சோதனை | Oneindia Tamil

  • 6 years ago
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்

ஒரு மருத்துவக்கல்லூரி மற்றும் 6 பொறியியல் கல்லூரிகள் போன்று சுமார் 20 கல்லூரிகளை சீனிவாசன் நடத்தி வருகிறார். அதேபோல் சீனிவாசன் அறக்கட்டளையை இயக்கிவருகிறார். இந்த நிறுவனங்களில் ஏற்கனவே பல வரிஏய்ப்பு புகார்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த சோதனை என்பது திருச்சியை அடுத்த பெரம்பலூரில் தான் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பெரம்பலூரில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருவதால் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல ஆயிரம் கோடி ருபாய் வரி எய்ப்பு நடந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளது என்றும் தொடந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் வருமான வரி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

Income Taxes are
conducting raids in 26 places owned by Dhanalakshmi Srinivasan Institute

Recommended