காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகை!

  • 6 years ago
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை சோனம் கபூர். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சோனம் கபூர் நேற்று காதலர் தினத்தை தன் காதலருடன் கொண்டாடியுள்ளார். மேலும், தன் காதலரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். பாலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் அனில் கபூர். இவரது மகள் சோனம் கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அனில் கபூர் மற்றும் சோனம் கபூர் ஆகியோர் ஷெல்லி தார் இயக்கும் படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். பாலிவுட் பிரபலங்கள் பலர் காதலர் தின வாழ்த்துகளைச் சொல்லிக் கொண்டிருக்க காதலர் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் சொனம் கபீஊர். சோனம் கபூருக்கும் அவரது காதலருக்கும் வரும் ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.


Sonam Kapoor is lead actress in bollywood and she is currently acting in many films. Sonam Kapoor celebrated Valentine's Day yesterday with his lover. She has also released her boyfriend's photo on Instagram.

Recommended