சாலையில் உச்ச போய் சிக்கிக்கொண்ட அமைச்சர் | Oneindia Tamil

  • 6 years ago
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பாஜகவை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் கலிசரண் சரஃப் நடு சாலையில் நின்று சுவரில் சிறுநீர் கழிக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாநிலங்கள்தோறும் ஆளுநர்கள் துடைப்பத்தை எடுத்து தூய்மை செய்வது போல் போஸ் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில ஆளும் பாஜகவைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் கலிசரண் சரஃப் ஜெய்ப்பூர் சாலையில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.

A picture of Rajasthan Health Minister Kalicharan Saraf urinating on the walls of the City has gone viral in social medias

Recommended