காதலர் தினத்தன்று விவாகரத்து: யுதன் பாலாஜி

  • 6 years ago
'கனா காணும் காலங்கள்' மூலம் பிரபலமானவர் நடிகர் யுதன் பாலாஜி. அதன் பிறகு அவர் நடித்த 'பட்டாளம்', 'காதல் சொல்ல வந்தேன்' போன்ற படங்களும் பிரபலம். தற்போது அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அதுவும் காதலர் தினமான நேற்றுதான் கோர்ட்டில் அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து கொடுத்துள்ளனர். திருமணம் நடந்து இரண்டு வருடமே ஆன நிலையில் இப்படி இருவரும் பிரிந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விஜய் டி.வியில் 2006 முதல் 2008-ம் ஆண்டு வரை ஹிட்டடித்த சீரியல் 'கனா காணும் காலங்கள்'. இரண்டு பாகங்களுமே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த சீரியல்களில் நடித்த பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் பின்னாட்களில் பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்து ஹிட் ஆனார்கள்.
ஆம், இப்போது நாங்கள் பிரிந்தது அதிகாரப்பூர்வமாகியிருக்கிறது. நாங்கள் இருவரும் பிரச்னையில்லாமல் சுமூகமாக பிரிந்திருக்கிறோம். எல்லோருக்கும் மகிழ்ச்சியான காதலர் தின வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

Actor Yuthan Balaji is famous for 'Kana Kaanum kaalangal'. After that, he has acted in films like 'pattalam' and 'kaadhal solla vandhen'. Now He has divorced her wife preethi . On Valentine's Day, he got divorce from his wife on high court.

Category

🗞
News

Recommended