தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் தமிழிசை

  • 6 years ago
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தீவிரவாதிகள் நடமாடும் இடமாக தமிழகம் மாறியுள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்



திருவள்ளூர் மாவட்டம் செங்கும் அடுத்த அலமாதியில் ஆரம்ப சுகாதார மையத்தின் விரிவாக்க கட்டடத்தை தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு திறந்து வைத்தார் .அப்போது பேசிய அவர் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சங்கிலி போட்டு இழுத்துசெல்ல வேண்டிய திருடர்கள் சங்கிலியோடு பெண்களை இழுத்து சென்று அதை பறிக்கும் நிலை தான் உள்ளது என்று குற்றம்சாட்டினர்

பைட்

மேலும் ஐஎஸ் தீவிரவாதி தமிழகத்தில் கைது மற்றும் அறிவாளால் ரவுடிகள் கேக் வெட்டுவது கைது செய்யப்படுவது சட்டஒழுங்கை மேலும் கேள்விக்குறியாக்கி உள்ளது என்றும் நீட் தேர்வை தவறுதலாக சித்தரிக்கின்றனர் என்றும் மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் பாஜக செய்யாது பாஜக என்றாலே எப்போதும் குற்றம் சாட்டும் ஒரு கூட்டம் அரசியல் செய்கிறது என்றும் நீட்டிற்கு மாணவர்களை தயார்படுத்தி படிக்க விடுங்கள் அவர்கள் சாதிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்

Recommended