முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திரு உருவப்படம் திறப்பு- வீடியோ

  • 6 years ago
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத் திறப்பையொட்டி சட்டமன்ற வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிமுக எம்.பிக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அமர வைக்கப்பட்டனர் பார்வையாளர் மாடத்திலும் சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது . பேரவையில் ஜெயலலிதா பட திறப்பு விழாவில் திமுக எம்எல்ஏக்கள் இருக்கை அதிமுக எம்பிக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது

7அடி உயரம் 5 அடி அகலம் கொண்ட ஜெயலலிதாவின் திரு உருவ படத்தை கவின் கலை கல்லூரி முன்னால் முதல்வர் மதியழகன் ஓவியமாக வரைந்துள்ளார் அந்த படத்தில் ஜெயலலிதா எப்பொழுதும் கூறும் நம்பிக்கை வாசகமான அமைதி வளம் வளர்ச்சி என்ற வாகமும் இடம் பெற்றிருந்தன . பச்சை வண்ணத்தில் சேலை அணிந்து கம்பீரமாய் ஜெயலலிதா நிற்கும் திரு உருவ படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார் .

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதுணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார் சட்டபேரவையில் 11வது உருவ படமாகவும் சட்டபேரவையில் முதல் பெண் தலைவர் படம் என்ற பெருமையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Des : Speaker opened his own in front of the late Chief Minister Jayalalithaa's statue

Recommended