பெண் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் 39 லிட்டர் வெளிநாட்டு சரக்கு பறிமுதல்!- வீடியோ

  • 6 years ago
மேற்கு வங்கத்தில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான பாரதி கோஷ் வீட்டில் 39 லிட்டர் வெளிநாட்டு சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி பாரதி கோஷ். இவர் பலரிடம் மிரட்டி பணம் பறிப்பதாக தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதைத்தொடர்ந்து கொல்கத்தாவின் மதுர்தகா பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சிஐடி போலீசார் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 8 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பல முக்கிய அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ஏராளமான ஆயுத உரிமங்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஏராளமானோரின் வேலைவாய்ப்பு சரிபார்ப்பு பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்காட்ச், ஜானி வால்கர், சிவாஸ் ரீகல் உள்ளிட்ட வெளிநாட்டு மதுவகைகள் சீல் செய்யப்பட்ட 57 பாட்டீல்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளார்.




At least 39 litres of imported liquor in 57 sealed bottles were seized from retired IPS officer Bharati Ghosh in Kolkatta yesterday. Bharati gosh was close to Mamata Banerjee.

Recommended