தா.ம.க.வை கலைத்துவிட்டு ஜி.கே.வாசன் ரஜினியுடன் இணைய வாய்ப்பு?- வீடியோ

  • 6 years ago
நடிகர் ரஜினிகாந்த் தொடங்கப் போகும் புதிய கட்சிக்கு ஆள் பிடித்துவிடுவதில் 'பிள்ளை பிடிக்கும்' கும்பலைப் போல டெல்லி படுதீவிரமாக இருந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு ரஜினி கட்சியில் இணைந்துவிடுங்கள் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கடும் நெருக்கடி தருகிறதாம் டெல்லி.

காங்கிரஸ் கட்சியில் ராகுலுடன் மோதி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் ஜி.கே.வாசன். என்னதான் காங்கிரஸ் பாரம்பரியம் என கூறிக் கொண்டாலும் டெல்லிக்கு மிக நெருக்கமான பெரும் தொழிலதிபரின் கண்ணசைவில்தான் தமாகாவின் முடிவுகள் இருந்து வருகின்றன.

Sources said that Tamil Manila Congress may merge with Rajinikanth's new political party.

Recommended