புலம்பும் அமெரிக்க ரிட்டர்ன்!

  • 6 years ago
திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆன நடிகையை தனது ரூபத்தைக் காட்டி மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கூட்டி வந்தார் உலக நாயகன். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் தவிக்கிறாராம் நடிகை.
'ஒழுங்கா அங்கேயே இருந்திருப்பேன். அவர் கூட ரெண்டு படம் நடிச்சதால அவரோட ஆள்னு முத்திரை குத்திட்டாங்க... சம்பளம் அதிகம் கேட்கிறேன்னு கிளப்பி விட்டாங்க.. இப்ப 20 வரைக்கும் இறங்கிட்டேன். ஆனா கண்டுக்க மாட்டறாங்க... என்ன பண்ணினால் இங்கே வாய்ப்பு கிடைக்கும்?' என்று புலம்புகிறாராம்.
இவரை ஹீரோயினாக நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அம்மா, அக்கா ரோல் பண்ண மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் என்று சினிமா வட்டாரம் சொல்கிறது. வயசுக்கு தகுந்த ரோல்னா கிடைக்கும்!

That US returned actress is in trouble to get chances in Tamil cinema even reduced the salary.

Recommended