ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்- வீடியோ

  • 6 years ago
ஆண்டாள் தாயர் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான தனது உண்ணாவிரதம் தொடரும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. இதனால் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. வைரமுத்து மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனது கருத்து திரித்து கூறப்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார் வைரமுத்து.
இந்நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வைரமுத்துவும் ஆண்டாளின் குழந்தைதான் என்றார்.

வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றும் ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் நீடிக்கும் என்றும் ஜீயர் தெரிவித்தார்.


Srivilliputhur Jeeyar begins his hunger strike. Poet Vairamuthu talk about Andal became controversy. Jeeyar urges Vairamuthu to apology for his talk. He has said that hunger strike will continue till Andal says to end.

Recommended