கொள்ளையன் நாதுராம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்- வீடியோ

  • 6 years ago
பள்ளிப்பருவத்திலேயே சேலை மற்றும் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நாதுராம் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் திட்டமிட்டு நகைக்கடைகளில் துளையிட்டு கிலோ கணக்கில் தங்க நகைகளை கொள்ளையடித்து வந்தது தெரியவந்துள்ளது. சென்னை கொளத்தூரில் நகை கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம்,28, தினேஷ் சவுத்ரி ,20 மற்றும் பக்தாராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொள்ளையனை கைது செய்ய சென்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து தனிப்படை போலீசார் மீண்டும் தேடிச்சென்று கைது செய்தனர். கைதான மூன்று கொள்ளையர்களும் ராஜஸ்தானில் இருந்து கடந்த 26ம் தேதி சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு 10 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது.

Rajamangalam police inquiry Nathuram and his accomplices Dinesh Chowdhary, 21, and Bagdaram, 23, to the Central Prison, Puzhal, after producing them before a magistrate court.

Recommended