மானிய விலையில் ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க லஞ்சம் கேட்டதாக புகார்- வீடியோ
  • 6 years ago
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் ஸ்கூட்டருக்கு மானியம் பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரூ. 225 லஞ்சம் வாங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். வேலைக்குச் செல்லும் மகளிர் பயனுறும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்கிட ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என கடந்த 2016 சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஸ்கூட்டர் வாங்க கடந்த 22ம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டது.

Complaint received on Bribe for Applying subsidy for scooters in Kanyakumari Municipality Office. District officers assured that actions are must be taken if the Complaint is true.
Recommended