பிப்.13ல் மாவட்ட தலைநகரங்களில் கண்டன கூட்டம்-ஸ்டாலின்- வீடியோ

  • 6 years ago
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பிப்ரவரி 13ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் யார் யார் எங்கெங்கு பங்கேற்கிறார்கள் என்பது பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசின் அதிரடி பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் ஜனவரி 29ம் தேதி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டங்களை நடத்தினர். இதன் அடுத்தகட்டமாக கட்டணத்தை குறைக்க போராட்டத்தைத் தொடர்வது குறித்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அனைத்துக் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


DMK headed all party meeting passed resolution to conduct meetings on district headquarters on 13th of February in which all party leaders will participate in every district correspondingly says M.K.Stalin after meeting concluded.

Recommended