தமிழகத்தில் ஊழல் நாற்றம் தாங்க முடியவில்லை-ராமதாஸ்- வீடியோ

  • 6 years ago
கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கைது செய்யப்பட வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். பேராசிரியர் பணி நியமனத்திற்காக ரூ.30 லட்சம் கையூட்டு வாங்கும் போது கையும், களவுமாக கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த ஊழலுக்கு தரகராக செயல்பட்ட வேதியியல் பேராசிரியர் தர்மராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து துணைவேந்தர் கணபதியை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமன ஊழலில் துணை வேந்தர் கணபதியைத் தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பேராசிரியர் நியமன ஊழல்கள் தொடர்பாக துணைவேந்தர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ஆசிரியர் நிலையில் உள்ளவர்களை கைது செய்து வரும் காவல்துறையினர், இந்த ஊழலில் அதிகாரப்படிநிலையின் உச்சத்தில் இருப்பவர்களை மட்டும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



TN Higher Education Minister has to be Arrested says PMK Founder Ramdoss. He also added that Special Team is to be set for the Investigation of Scams in Universities.

Recommended