பாவம்ய்யா ஜூலி!-வீடியோ

  • 6 years ago
விமல், ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா பொன்வண்ணன், ஜெயப்ரகாஷ், ஜூலி ஆகியோர் நடிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மன்னர் வகையறா'. இந்தப் படம் ஆக்‌ஷன் காமெடி படமாக ஃபேமிலி சப்ஜெக்டில் உருவானது. 'மன்னர் வகையறா' படத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்நிலையில், 'மன்னர் வகையறா' படக்குழுவினர் கலந்துகொண்ட ப்ரொமோஷனில் எரிச்சலூட்டும் நபர் என ஜூலியைக் குறிப்பிட்டிருக்கிறார் விமல். விமல், ஆனந்தி ஆகியோர் நடிப்பில் வெளியானது 'மன்னர் வகையறா' திரைப்படம். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ஜூலி. படத்தை விளம்பரப்படுத்துவதற்காக விமல், ஜூலி இருவரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இப்படியாக, படத்தில் ஜூலியை கலாய்த்ததோடு, ப்ரொமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவைத்து அசிங்கப்படுத்துகிறார்கள். கெஸ்ட் ரோல் நடித்ததெற்கெல்லாம் ப்ரொமோஷனில் கலந்துகொள்வதே பெரிய விஷயம். அங்கும் ஜூலியை கார்னர் செய்தால் என்னதான் செய்வார்?

Vimal and julie participated in 'Mannar vagaiyara' promotion program. In this program, anchor asked vimal, "who is annoying person in biggboss show?". Vimal answered, "Julie is most annoying person in biggboss".

Recommended