தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்- வீடியோ

  • 6 years ago
திருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்தியதால் காயமடைந்த அவர் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளவர் பாபு. இவர் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.அப்போது அவரது அறைக்கு ஆவேசமாக வந்த மாணவன் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சுருண்ட பாபுவை ஊழியர்கள் மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக திருப்பத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாபுவை அந்த மாணவன் ஏன் கத்தியால் குத்தினார் என்ற காரணம் தெரியவில்லை.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சமீபகாலங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.


A student of Tiruppathur school, Vellore District attacks his School Headmaster using Knife. He admits in Vellore CMC Hospital for getting treatment on his severe injuries.

Recommended