இந்த வருடம் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் குடும்பம் இதுதான்

  • 6 years ago
ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து இருக்கிறது. கோஹ்லியை விட சில அதிக விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறார்கள். பாண்டியா குடும்பத்திற்கு இந்த ஒரு ஐபிஎல் போட்டியை வைத்தே வாழ்நாள் முழுக்க வாழும் அளவிற்கு பணம் கிடைத்து இருக்கிறது. குர்ணால் பாண்டியா ஐபிஎல் ஏலத்தில் மிக அதிக தொகைக்கு சென்று இருக்கிறார்.

இந்த ஐபிஎல் போட்டியில் கோஹ்லி பெங்களூர் அணியால் ஆர்டிஎம் மூலம் மீண்டு எடுக்கப்பட்டார். இவர்தான் இந்த ஐபிஎல் போட்டியில் விலை மதிக்க முடியாத நபர். இவர் மொத்தம் 17 கோடிக்கு எடுக்கப்பட்டார்.

அதேபோல் ஹர்திக் பாண்டிய மும்பை அணியால் எடுக்கப்பட்டார். இவருடைய புதிய பார்மை பார்த்துவிட்டு இவருக்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. இவரை மும்பை அணி ஆர்டிஎம் மூலம் 11 கோடிக்கு எடுத்தது.

Recommended