ஐபிஎல் ஏலத்தின் இரண்டாம் நாள்

  • 6 years ago
ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. நேற்று முதல் நாள் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. பல சுவாரசியமான சம்பங்கள் நேற்று நடந்தது. அதைவிட பல முக்கியமான சம்பவங்கள் இன்று நடக்க இருக்கிறது. முக்கியமாக சில வீரர்கள் இன்றுதான் ஏலத்திற்கு வர இருக்கிறார்கள். தமிழக வீரர்களும் இன்று ஏலம் எடுக்கப்படுவார்கள். ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 578 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் 300 பேர் இந்தியர்கள். இதில் முதல் நாள் ஏலத்தில் 110 பேர் கலந்து கொண்டார்கள். இதில் 78 பேர் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்டனர். இதில் 49 பேர் இந்திய வீரர்கள், 29 வீரர்கள் வெளிநாட்டினர். இன்று அதேபோல் தமிழக வீரர்கள் நிறைய பேர் ஏலத்திற்கு வர இருக்கிறார்கள். நிறைய ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடிய வீரர்களும் ஏலத்திற்கு வர உள்ளனர். அதனால் இன்றைய நாள் இன்னும் விறுவிறுப்பாக இருக்கிறது.

Recommended