அனுஷ்காவுக்காக 5 ஆண்டுகள் காத்திருந்தார் என தெரியுமா?

  • 6 years ago
இயக்குனர் ஒருவர் அனுஷ்காவுக்காக 5 ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார். அஷோக் இயக்கத்தில் அனுஷ்கா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்துள்ள பாகமதி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, 2013ம் ஆண்டின் துவக்கத்தில் நான் அனுஷ்காவை அணுகி பாகமதி படம் பற்றி கூறினேன். அவரும் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் பாகுபலி மற்று ருத்ரமாதேவி படங்களில் ஏற்கனவே கமிட் ஆகியிருந்ததால் நான் காத்திருந்தேன். நான் அனுஷ்காவுக்காக 5 ஆண்டுகள் காத்திருந்தேன். பாகமதி படத்தில் வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்க முடியாது. அதனால் நான் அவருக்காக காத்திருந்தேன். பாகமதி மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்திருந்ததால் அனுஷ்கா 5 ஆண்டுகள் கழித்தும் என் படத்தில் நடித்தார். அதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார் அஷோக்.
தொடர்ந்து 4 படங்கள் தோல்வி அடைந்ததால் சோகத்தில் இருந்த பிரபாஸுக்கு பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாகுபலி படங்களுக்காக அவர் 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதே போன்று அஷோக் அனுஷ்காவுக்காக 5 ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார்.

Bhaagamathie director Ashok said in an interview that he waited for Anushka for five years as she was busy with Baahubali series and Rudramadevi. Bhaagamathie has hit the screens today.