விசாரணை அதிகாரிகளேயே திணற வைத்த இந்தியாவின் பின்லேடன்- வீடியோ

  • 6 years ago
அப்துல் சுபான் குரேஷி என்ற தீவிரவாதியை டெல்லி போலீஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தது. இவர் இந்தியாவின் பின்லேடன் என்று அழைக்கப்பட்டு வந்தவர். உலகத்தில் உள்ள நிறைய நாட்டு உளவுப்படை இவரை தீவிரமாக தேடி வந்தது. உலகில் இருக்கும் பல தீவிரவாத இயக்கங்களுடன் இவன் நேரடி தொடர்பில் இருந்தார். தற்போது விசாரணை அதிகாரிகள் இவனை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அவனிடம் பேசி எந்த விஷயத்தையும் வாங்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

அப்துல் சுபான் குரேஷி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் செயல்பட்டு வந்த முக்கியமான தீவிரவாதி. குஜராத்தில் உள்ள அஹமதாபாத் மற்றும் சூரத்தில் 2008 ஜூலை மாதம் 26ம் தேதி தொடர்ச்சியாக இருபது இடங்களில் குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 56 பேர் மரணம் அடைந்தார்கள். பெங்களூரில் 2014ல், டெல்லியில் 2010ல் நடந்த குண்டுவெடிப்பு என அனைத்திற்கும் இவர்தான் காரணம்.

2 நாள் முன்பு டெல்லி போலீஸ் இவரை கைது செய்து இருக்கிறது. டெல்லியில் உள்ள ஒரு மார்க்கெட்டில் வைத்து இவரை கைது செய்து இருக்கிறது. தற்போது இவருக்கு 46 வயது நிரம்பி உள்ளது. சுபானுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.

Recommended