டெல்லியில் உயிரிழந்த மாணவனுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி- வீடியோ

  • 6 years ago
டெல்லியில் மர்மமான முறையில் கழிவறையில் இறந்து கிடந்த தமிழக மருத்துவ மாணவர் சரத்பிரபுவுக்கு அனைத்து கட்சி மற்றும் தொழில் கூட்டமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்



டெல்லியில் உள்ள யுசிஎம்சி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த திருப்பூரை சேர்ந்த தமிழக மாணவர் சரத்பிரபு விடுதி கழிவறையில் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார் . அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர் .ஏற்கனவே டெல்லியில் எம்இஎஸ் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரவணம் மர்ம மான முறையில் உயிரிழந்தார் .தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது . இந்நிலையில் இன்று மறைந்த மாணவர் சரத்பிரபுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூர் மாநகராட்சி முன்பு வைக்கப்பட்டுள்ளன அவரது படத்திற்கு திமுக . காங்கிரஸ் , மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் தொழில் கூட்டமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்

Recommended