இறந்தவரை திருமணம் செய்துகொண்ட பெண்- வீடியோ

  • 6 years ago
உலகில் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி இருக்கும். வாழ்க்கை மோசமாக இருக்கிறது, மிகவும் நன்றாக இருக்கிறது என்று பலரும் கூற கேட்டு இருப்போம். அதேபோல் அயர்லாந்து பெண்மணியும் அங்கு இருக்கும் பத்திரிக்கைகளுக்கு தன்னுடைய திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்று பேட்டி கொடுத்து இருக்கிறார். ஆனால் இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால் அவர் திருமணம் செய்து கொண்டது ஒரு பேயை. பேய்க்கு மனிதருக்கும் நடந்த இந்த திருமணத்தால் இரண்டு வருடமாக அயர்லாந்தில் அந்த பெண் வைரலாக இருக்கிறார்.

அயர்லாந்தில் இருக்கும் 'அமாண்டா டீக்' என்ற பெண் சிறுவயதில் இருந்து கடற்கொள்ளையர்களை பற்றி படித்தும், படம் பார்த்தும் வளர்ந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2016ல் அவர் கரிபியன் கடல் கொள்ளையர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் 300 வருடத்திற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டார்.

கரிபியனை சேர்ந்த 'ஜாக் லார்ஜ்' என்பவரை அந்த பெண் திருமணம் செய்துள்ளார். அவர் பேயாக வந்து தன்னிடம் காதல் சொன்னதாக சொல்லியுள்ளார். முதலில் நண்பர்களாக இருந்தோம் பின் காதலித்தோம் என்று கூறியுள்ளார். இவர் தன் திருமணத்திற்கு நண்பர்களை எல்லாம் அழைத்து இருக்கிறார்.

இவர் திருமணத்தை அயர்லாந்து அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் சென்ற வருடம் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இன்னும் அவர் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. பேயுடன் நடக்கும் திருமணத்திற்கு எந்த நாடு ஒப்புக் கொள்கிறதோ அங்கு குடியுரிமை வாங்க அவர் முடிவெடுத்துள்ளார்.


Ireland woman named Amanda Teague marries 300-year-old ghost. She says that she lives happily after that, and her marriage life with him is such a awesome one.

Recommended