பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும் - கமல்

  • 6 years ago
பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக நடிகர் கமல் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம் என்று கமல் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக ட்வீட் போட்டு கருத்து கூறி அரசியலில் களமிறங்கினார் கமல். பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். ரசிகர்களை சந்தித்து பேசி வரும் கமல், மக்களை சந்திக்க நேரம் வந்து விட்டது என்று கூறியிருந்தார். ஒரு கோடி பேரை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார் கமல். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வு பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே! என்று கூறியுள்ளார்.


Actor Kamal Haasan took to the micro-blogging site Twitter to express his view on the recent hike on bus ticket rates.

Recommended