3வது மாடியில் தொங்கிக் கொண்டு இருந்த குழந்தை...வீடியோ

  • 6 years ago
சீனாவில் பொதுவாக வீடுகள் நெருக்கமாகவும், உயரமாகவும் கட்டப்படுவது வழக்கம். மும்பையில் இருப்பது போல அங்கும் பல அடுக்கில் வீடுகள் கட்டப்படும். அப்படி ஒரு வீட்டில் தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. மூன்றாவது மாடியில் இருந்து ஒரு குழந்தை கீழே விழும் அளவிற்கு தொங்கி கொண்டு இருந்துள்ளது. இந்த குழந்தையை இளைஞர் ஒருவர் கெத்தாக காப்பாற்றி இருக்கிறார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
சீனாவின் மக்கள் கூட்டம் நிறைந்த 'சே ஜியான்ங்' என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு இருந்த கட்டிடம் ஒன்றில் மூன்றாவது மாடியில் குழந்தை ஒன்று தொங்கிக் கொண்டு இருந்துள்ளது. ஜன்னலுக்கு வெளியே வந்து சிறிய சுவற்றில் ஒட்டிக் கொண்டு இருந்துள்ளது.

அந்த குழந்தை தொங்கி கொண்டு இருந்ததை பக்கத்தில் கடை வைத்து இருந்த இளைஞர் பார்த்து இருக்கிறார். அவர் உடனடியாக பக்கத்து வீட்டு பால்கனி வழியாக சென்று அந்த குழந்தையை தூக்கி இருக்கிறார். இதனால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.


Man rescues a child hanging in 3rd floor in China. The exclusive video of this rescue operation got viral in social media.

Recommended