தனிக்கட்சி பற்றிய முடிவில் தினகரனின் புதிய பிளான்- வீடியோ

  • 6 years ago
'அதிமுக அம்மா' என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டிடிவி தினகரன் சார்பில் டெல்லி ஹைகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் அதிமுகவுக்கு உரிமை கொண்டாடியபோது, அதிமுக அம்மா என்ற பெயர் சசிகலா-எடப்பாடி தரப்புக்கும், அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயர் பன்னீர்செல்வம் தரப்புக்கும் ஒதுக்கப்பட்டு, அதிமுக என்ற பெயரை எந்த தரப்பும் பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

எடப்பாடி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் இணைந்ததும், அவர்கள் கோரிக்கையை ஏற்று, அதிமுக பெயரை பயன்படுத்த, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான இந்த அணியினருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தது.
இதையடுத்து தினகரன் சுயேச்சையாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.

இப்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி என்ற ஒன்று இல்லாவிட்டால் தமிழகம் முழுக்க ஒரே சின்னத்தில் போட்டியிட முடியாது என்ற சூழல் உள்ளதால் தினகரன் கலக்கம் அடைந்துள்ளார். தனிக்கட்சி துவங்க அவர் திட்டமிட்டாலும், ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் போன்றோர் அதிமுக பேனரில்தான் நாம் இயங்க வேண்டும் என கறார் காட்டி வருவதாக தெரிகிறது.


Dhinakaran moves an application in Delhi HC seeking direction to EC to permit his camp to continue using ADMK-Amma name in the upcoming civic polls, also says such use of this name & interim symbol should not prejudice the pending two leaves symbol appeal

Recommended