அரசியல் தட்பவெப்பம் அறிந்து சிறகடிக்கும் புதிய பறவைகள்- ஸ்டாலின்- வீடியோ

  • 6 years ago
அரசியல் தட்பவெப்பம் அறிந்து புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்து படுதோல்வியடைந்தது. இதனிடையே நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவது உறுதி எனக்கூறி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அரசியல் தட்பவெப்பம் அறிந்து புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லோருக்குமான வானம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நூறாண்டு கடந்தும் திமுக ஓய்வின்றி உயரே பறந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

DMK working president Stalin said that the new birds are trying to fly by looking at the political climate. DMK leader MK Stalin said in his statement that democracy is the sky for everyone. He said that the DMK has fled over a hundred years.

Recommended