அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

  • 6 years ago
அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விவேகம் படத்தை அடுத்து அஜீத் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். வழக்கத்திற்கு மாறாக படத் தலைப்பை முன்கூட்டியே அறிவித்துவிட்டார் சிவா. இருப்பினும் படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லை. விசுவாசம் படத்தில் அஜீத் கருப்பு நிற முடியுடன் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் விஜய் படத்தின் படப்பிடிப்பை துவங்கிவிட்டார். ஆனால் சிவா இன்னும் விசுவாசம் படப்பிடிப்பை துவங்கவில்லை. ட்விட்டர் பக்கத்திலும் எந்த தகவலும் இல்லை. இதனால் ரசிகர்கள் லைட்டா கடுப்பாகியுள்ளனர்.

Latest picture of Ajith has gone viral on social media. Thala is sporting black hair and white beard in those photos. Fans are eagerly waiting for director Siva to give updates about Viswasam.