ஆயுள் முழுவதும் இந்தியாவுக்கே-கமல்- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியன சரியில்லை என்றும் இந்தியாவை பெருமையடையச் செய்வேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்தும், ஆட்சியாளர்கள் குறித்து கமல் பேசிவந்தார். மேலும் தான் அரசியல் கட்சியை தொடங்க போவதாகவும் அவர் அறிவித்தார். எனினும் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அந்த தேர்தலில் போட்டியிடுவோர் குறித்தும் எதையும் பேசவில்லை.

ஆர்கே நகர் தேர்தல் முடிந்த பிறகு அங்கு பணம் விளையாடியது குறித்தும் திருடனிடமே பிச்சை எடுக்கும் மக்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.ராமேஸ்வரத்தில் இருந்து வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்குவேன் என்று கமல் அறிவித்திருந்தார். மேலும் கலாம் வீட்டிலிருந்து தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன். இந்தியாவின் பயணம் தமிழகத்தில் இருந்து தொடங்கும்.



Kamalhassan says that he will make India to be proud within his life span. From Next month India's journey starts from Tamilnadu, he added.

Recommended