போராட்டத்தில் குதித்த மாணவர்கள்...பொதுமக்கள்..வீடியோ

  • 6 years ago
தமிழக அரசு பஸ்கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து தமிழகத்தில் பல கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நேற்று பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பேருந்து உயர்வை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திங்கட்கிழமையன்று யாரும் கல்லூரிக்கு செல்ல வேண்டாம்..கல்லூரி முன் நின்று அமைத்தி போராட்டம் செய்ய வேண்டும். இதனோடு பொது மக்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்க்கும் படி கேட்டுக்கொள்கிறோம் என்ற செய்தி வாட்ஸ்அப்பில் பரவியது.இதனையடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனினும் கல்லூரிக்கு சென்ற பல மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தநிலையில் தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பாக அமர்ந்த மாணவிகள், கட்டணம் இருமடங்கானதால் ஊரில் இருந்து கல்லூரிக்கு வர சிரமப்படுவதாக கூறினர். 17 ரூபாய் இருந்த கட்டணம் 35 ரூபாயாக உயர்ந்து விட்டதாகவும், பஸ்பாஸ் கூட நிறுத்தி விடுவார்கள் என்றும் கூறினர்.

Recommended