தங்க தமிழ்ச்செல்வனுக்கு டி.டி.வி தினகரன் பதில்

  • 6 years ago
கரூரில் கோவில் ஒன்றில் வழிபாடு நடத்திய டி.டி.வி தினகரன், தனிக்கட்சி தொடங்குவதில் இருக்கும் சிக்கல்கள் எனக்குத் தெரியும். அதுகுறித்து தான் தற்போது ஆலோசித்து வருகிறேன் என்று தெரிவித்து உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து டி.டி.வி தினகரன் பல்வேறு கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். இந்நிலையில், கரூரில் உள்ள சதாசிவ பிரமேந்திராள் கோவிலில் இன்று தினகரன் வழிபாடு நடத்தினார். அவரோடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட டி.டி.வி தினகரன் ஆதரவாளர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். வழிபாடு முடித்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் பெறுவதற்கான எங்கள் போராட்டம் தொடரும். ஆனால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியற்றை எதிர்கொள்ள எங்களுக்கு கட்சியும் சின்னமும் தேவை. அதற்கு முதல் கட்டமாக அ.தி.மு.க. அம்மா அணி என்று செயல்படுவதற்கு கோர்ட்டில் மனு செய்ய உள்ளோம். அதற்காக ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

அதை நீதிமன்றம் அனுமதித்தால் அ.தி.மு.க. அம்மா அணி என்று செயல்படுவோம். அதனை நீங்கள் தனிக்கட்சி என்று எடுத்துக்கொண்டாலும் சரி, தனி அணி என்று எடுத்துக் கொண்டாலும் சரி. அணி என்றாலும் அது கட்சி தான். கோர்ட்டு அனுமதி வழங்காத பட்சத்தில் அடுத்தகட்ட முயற்சியை மேற்கொள்வோம். அதிமுகவின் 90 % தொண்டர்களின் பலம் எங்களிடம் உள்ளது. அவர்களை வழிநடத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.


Our only Motive is to get back Two leaves symbol and ADMK Party says TTV Dhinakaran. He also added that there is lot of Practical Problems in Starting a New Party.

Recommended