விஜய் 62 படத்தின் ஷூட்டிங் துவங்கியது..!!

  • 6 years ago
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த கூட்டணி இணைவது இது மூன்றாவது முறை என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்திற்கான போட்டோஷூட் ஏற்கனவே முடிந்து, புகைப்படங்கள் சில மணி நேரங்களில் லீக் ஆகியிருந்தது. அது படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் தளபதி 62 படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது. விஜய் கலந்துகொண்ட பூஜை புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் அடுத்து யார் படத்தில் நடிக்கப்போகிறார் எனும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. மெர்சல் படம் வெளிவருவதற்கு முன்பே கசிந்த தகவல்படி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் விஜய்.


Actor Vijay's next movie is with director AR Murugadas. The shooting of the film Thalapathy62 is started with the pooja today. 'Vijay62' Pooja photo has been releasedon social media.

Recommended