திறந்த வெளியில் துப்புரவாளர் பிரேத பரிசோதனை செய்த அவலம்

  • 6 years ago
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திறந்த வெளியில் துப்புரவு பணியாளர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளதை அடுத்து மருத்துவர் உள்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரயிலில் அடிபட்டு இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது மருத்துவர்கள் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த துப்புரவு பணியாளரும் மருந்தாளுநரும் திறந்த வெளியில் பிரேத பரிசோதனை செய்தனர். இதனால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில் துப்புரவு பணியாளர் பிரேத பரிசோதனை செய்தது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் விஷ்வ பிரியா அரக்கோணம் மருத்துவமனைக்கும், துப்புரவு பணியாளர் அப்பாவு, மருந்தாளுநர் ருக்மாங்கதன் ஆகியோர் முறையே திருத்தணி மற்றும் ஆவடி அரசு மருத்துவமனைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Jharkhand youth who was died in rail accident was taken to Tiruvallur GH for post mortem . At that time Doctor was not there, so Sweepers have done post mordem in open space. Doctor and sweepers were transferred.

Recommended