தமிழர்கள் அனைவரையும் இந்துக்களாக ஒருங்கிணைக்க நினைக்கும் முயற்சி நிறைவேறுமா ?

  • 6 years ago
தமிழர்களை இந்துகளாக அணிதிரட்டும் முயற்சி நிச்சயம் எடுபடாது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. தமிழகத்தில் பாஜக நேரடியாக காலூன்ற முடியாத அளவுக்கு எதிர்வினை இருந்து வருகிறது. இதனால் மறைமுகமாக பல்வேறு சக்திகளின் துணையோடு தமிழகத்தில் காலூன்ற பாஜக கடுமையாக முயற்சிக்கிறது. ஆண்டாள் விவகாரத்தை முன்வைத்து 'இந்துக்களாக' தமிழர்களை அணிதிரட்டும் ஒரு அரசியலையும் பாஜக நூல் விட்டுப் பார்ப்பதாகவே தெரிகிறது. ஆனால் இது சொந்த காசில் சூனியம் வைப்பது போல என்று விவரம் தெரிந்தவர்களுக்குப் புரியும்.

தமிழகத்தின் அடிப்படை வரலாற்று போக்கை புரிந்து கொள்ளாமல் தமிழர்களை இந்துக்களாக ஒன்றுபடுத்த பாஜக பார்ப்பது என்பது மொட்டை பாறையில் மோதி மண்டையை உடைத்துக் கொள்ளும் செயலாகவே பார்க்கப்படுகிறது. வடக்கே ஆரியம் வேர்பிடித்த காலங்களில் சமணம், பவுத்தம்தான் தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்தது.

ஐவகை நிலங்களில் முன்னோர் வழிபாடும் இயற்கை வழிபாடும் இருந்தது. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களே சமண, பவுத்த காப்பியங்கள்தான். உலகப் பொதுமறையாம் திருக்குறள் சமண காப்பியம்தான். சமணம், பவுத்தம், இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு இவைதான் தமிழர்கள் பின்பற்றிய சோ கால்ட் 'ஆன்மீக'ம் என்பது.

BJP's politics of religious polarisation will not work in Tamil Nadu. In Tamilnadu Tamil identity and the Dravidian political culture are playing the biggest role.