தமிழக அரசியல் மர்மங்களை பார்த்தல் ஒரு நிமிஷம் தலையே சூத்திரம் போல!

  • 6 years ago
"திடீர் திடீருன்னு, உருளுதாம்..." என்ற சந்திரமுகி திரைப்படத்தில் வரும் பேய் அரண்மனையை போன்ற ஒரு சூழலுக்குள் சிக்கியிருப்பதாக உணர்கிறார்கள் தமிழக மக்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2016ம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் துவங்கிய தமிழக அரசியல் மர்மம், இன்னும் விலகவில்லை. சொல்லப்போனால் அதிகரிக்கிறது. ஜெயலலிதா மறைந்த சில நாட்களிலேயே அவசரமாக சசிகலா ஏன் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் என்பதில் தொடங்கியது அடுத்த மர்மம்.

சாதுவாக இருந்த பன்னீர்செல்வம், நள்ளிரவு சமாதி தியானத்தில் உட்கார்ந்தது ஏன் என்பது அடுத்த மர்மம். கூவத்தூரில் தங்களை வைத்து பாதுகாத்த சசிகலா, தினகரன் தரப்பை புறக்கணித்துவிட்டு, தர்ம யுத்தம் நடத்துவதாக தொடை தட்டிய பன்னீர்செல்வம் அணியை எடப்பாடி ஏன் இணைத்தார் என்பது இன்னொரு மர்மம்

சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால்தான் பன்னீர்செல்வம் கோபித்து பிரிந்தார் என்று தெரிந்தும், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு எடப்பாடியிடமிருந்து முதல்வர் பதவியை பறிக்க தினகரன் ஏன் நினைத்தார் என்பது பெரும் மர்மம். ஆர்.கே.நகரில் அத்தனை படைபலத்தையும் மீறி டோக்கன் கொடுத்து சுயேச்சை எப்படி வென்றார் என்பது 2017ன் மிகப்பெரிய மர்மம்.

The Tamil Nadu political situation has been confused for over a year and a half.

Recommended