நடிகர்களின் அரசியல் பிரவேசம்.... ஓ.பி.எஸ். திடீரென டெல்லி செல்வதன் பின்னணி என்ன ?

  • 6 years ago
ஆர்கே நகர் தேர்தல் தோல்வி, அரசியல் களம் இறங்கும் நடிகர்கள் என்று அதிமுக நெருக்கடியில் இருக்கும் நிலையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர பயணமாக இன்று டெல்லி செல்வது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓகி புயல் பாதிப்பின் போது நிவாரணம் கோரக் கூட டெல்லி போகாத ஆட்சியாளர்கள் இப்போது ஏன் பிரதமரை சந்திக்கச் செல்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

அதிமுக அணிகள் பிளவுபட்டிருந்த சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை என டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் இருவருமே சொன்ன காரணம் தமிழக பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாக கூறினர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்றனர். இரு அணிகள் இணைப்பிற்கு அதுவே கடைசியாக பாஜக கெடு விதித்த சந்திப்பாக இந்த பயணம் பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்றாற் போல ஆகஸ்ட் மாதத்திலேயே இரு அணிகளும் இணைந்தன.

As ADMK is in critical political condition because of RK Nagar elecction result and Kamalhaasan, Rajinikanth's political entry Deputy CM O. Paneerselvam rushing to Delhi urgently today.

Recommended