படத்தில் போதைக்கு அடிமையான பெண்ணாக, ஒரு சவாலான வேடத்தில் நடிக்கிறாராம் நடிகை ரெஜினா.

  • 6 years ago
நடிகராக தெலுங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் நானி 'அவ்' எனும் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ரவி தேஜா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் ரெஜிகா கசாண்ட்ரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் போதைக்கு அடிமையான பெண்ணாக, ஒரு சவாலான வேடத்தில் நடிக்கிறாராம் நடிகை ரெஜினா.
'அவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரெஜினாவின் பிறந்தநாள் அன்று 'அவ்' பட போஸ்டரை நானி வெளியிட்டார். தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை பிரசாந்த் வர்மா இயக்குகிறார். காஜல் அகர்வால், நித்யாமேனன், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் ரெஜினா ஒரு ஹாட்டான கேரக்டரில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். 'அவ்' பட போஸ்டரில் உடல் முழுக்க பச்சை குத்தி வேறொரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார் ரெஜினா. தற்போது ரெஜினா கசாண்ட்ரா, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' மற்றும் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து 'மிஸ்டர் சந்தரமௌலி' படத்தில் நடித்துவருகிறார். "இந்தப் படத்தில் போதைக்கு அடிமையான பெண்ணாக, ஒரு சவாலான வேடத்தில் நடிக்கிறேன். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இது எனது பெயர் சொல்லும் வேடமாக அமையும். அதோடு, இந்த வேடம் நெகடிவ் கலந்த வேடமாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார் ரெஜினா.

Ravi Teja, Kajal Aggarwal, Nithya Menon and Regina Cassandra are in the film 'Awe'. In 'Awe' poster, Regina is in a different look with body tattoos. "In this film, I am acting as a drug addict, a challenging role, and this role will be a negative character," Regina said.

Recommended