விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் நாள் வாழ்த்து தெரிவித்து நெட்டிசன்களிடம் சிக்கிக் கொண்டார் ஜூலி.

  • 6 years ago
விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் நாள் வாழ்த்து தெரிவித்து நெட்டிசன்களிடம் சிக்கிக் கொண்டார் ஜூலி. டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், தொகுத்து வழங்கியும் வரும் ஜூலி தற்போது கோலிவுட் ஹீரோயின் ஆகியுள்ளார். உத்தமி என்று அந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜூலி. பேசியது இல்லை..பார்த்தது இல்லை..பழகியது இல்லை..ஆனாலும் அன்புகுரியவராகவே திகழ்கிறார்..இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.. என ட்வீட்டியுள்ளார் ஜூலி. அந்த பொண்ணு ஜூலி விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தான் தெரிவித்துள்ளார். ஆனால் அதை பார்த்தே பலர் கடுப்பாகி ஜூலியை கலாய்க்கத் துவங்கிவிட்டனர். நல்ல எண்ணத்தில் வாழ்த்துச் சொல்லப் போய் நெட்டிசன்களிடன் ஏகத்திற்கும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார் ஜுலி. நீ எல்லாம் வாழ்த்தவில்லை என்று யார் அழுதா என்று ஆளாளுக்கு கேட்கிறார்கள். என்ன கோலிவுட் ஹீரோயினாகிவிட்டதால் உன் உத்தமி படத்திற்கு விளம்பரம் தேடுகிறாயா என்று எல்லாம் ஜூலியிடம் கேட்கிறார்கள். வாழ்த்து சொன்னது ஒரு குத்தமாய்யா?

Julie has wished actor Vijay Sethupathi who is celebrating his birthday today. Netizens slam Julie who tweeted wishing birthday boy Vijay Sethupathi. It is noted that Julie is a leading lady of Kollywood.

Recommended