இந்தியா வந்தடைந்தார் இஸ்ரேல் பிரதமர்... பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • 6 years ago
ஆறு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை பெஞ்சமின் நெதன்யாகு இன்று சந்தித்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அப்போது அளிக்கப்பட்டது. இதன்பிறகு, இரு தரப்பினருக்கும் நடுவே உயர்மட்ட பேச்சுவாரத்தை நடைபெற்றது. இதன்பிறகு, பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இந்திய பிரதமர் மோடி சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, ஹோமியோபதி மருந்து உற்பத்தி, விவசாயம், திரைப்படத்துறை, அறிவியல்-தொழில்நுட்பம், சைபர் துறை உள்ளிட்ட 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மோடி பேசுகையில், இந்தியா வந்துள்ள எனது நல்ல நண்பரை வரவேற்கிறேன். அவரது வருகை புத்தாண்டு காலண்டரில் சிறப்பான தொடக்கமாக குறிக்கப்படும். இரு நாட்டு நட்டுப்புறவை மேம்படுத்துவதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வுகளை நடைமுறைப்படுவதற்கான வாய்ப்பாகவே நேற்றும், இன்றும் நடந்த எங்களின் சந்திப்பு அமைந்துள்ளது.

India and Israel have agreed to enhance co-operation in the areas of agriculture, science and technology and security, Prime Minister Narendra Modi said on Monday

Recommended