எனது வீட்டின் படுக்கையறையில் சோதனை நடத்தினர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு- வீடியோ

  • 6 years ago
சென்னை, டெல்லியில் நடந்த அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்ட நாடகம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படாமல் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றதாகவும் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் டெல்லியில் உள்ள ப. சிதம்பரத்தின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று காலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திலேயே இந்த சோதனையானது முடிந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் சோதனை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது : ஏர்செல் மேக்சிஸ் வழக்கு எப்போதோ தொடரப்பட்டது, நேற்று நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் தொடர்புடையவர்கள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜனவரி 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாராம்சமே இது வரை போலீசாரோ, சிபிஐயோ எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை

Former finance minister P.Chidambaram says Enforcement direcctorate has no jurisdiction to conduct raid as no FIR has been filed in the Airccel Maxis case, but they conducted raid is nothig but a drama

Recommended