போராட்டம் தற்காலிக வாபஸ்தான்- வீடியோ

  • 6 years ago

கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குரவத்து தொழிலாளர்கள் போராட்டம் நேற்று இரவு வாபஸ்பெற்றதையடுத்து இன்று காலையில் இருந்து வழக்கம் போல் பேருந்துகள் இயங்க தொடங்கின. இதனால் பொதுமக்களும் பயணிகளும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைந்தனர். தமிழக அரசு பேருந்துகளை இயக்க பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பலிக்காமல் போனது. இந்நிலையில் நேற்று உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மத்தியஸ்தர் நியமணம் செய்யப்பட்டு போக்குவரத்து தொழிலாளர்களின் உதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதனால் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நேற்று இரவு தற்காலிகமாக வாபஸ் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் இருந்து தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கத் தொடங்கின. இதனால் பொதுமக்களும் பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Des: Buses began to operate as usual in the morning since the last eight days of striking workers' strike took place last night. The public and passengers were so relieved.

Recommended