பாலிவுட்டில் அறிமுகமாகத் துடிக்கும் இசபெல் கைஃப் லேக்மி நிகழ்ச்சியில் ஓவர் சீன் போட்டுள்ளார்.

  • 6 years ago
பாலிவுட்டில் அறிமுகமாகத் துடிக்கும் இசபெல் கைஃப் லேக்மி நிகழ்ச்சியில் ஓவர் சீன் போட்டுள்ளார். நடிகை கத்ரீனா கைஃபின் தங்கை இசபெல் கைஃப் அக்கா வழியில் பாலிவுட்டில் நடிக்க விரும்புகிறார். பட வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து வருகிறார். அக்காவுடன் சேர்ந்து பாலிவுட் பார்ட்டிகளுக்கு சென்று பிரபலங்கள் கண்ணில் படுகிறார். லேக்மி பிராண்ட் அம்பாசிடராகியுள்ள இசபெல் கைஃப் மீடியாவை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் லைட்டை காரணம் காட்டி ஓவர் சீன் போட்டுள்ளார். தன்னை சுற்றி லைட்டாக உள்ளதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்து ஒரு மணிநேரத்தை வீணடித்துள்ளார். இது தான் அவர் ஒப்பந்தமாகியுள்ள முதல் பெரிய பிராண்ட். அதற்குள் அவர் ஓவர் சீன் போடுகிறார் என்று பெயர் வாங்கிவிட்டார். மீடியாக்காரர்கள் பாலிவுட் குறித்து தன்னிடம் எந்த கேள்வியும் கேட்காமல் பார்த்துக்கொள்ளுமாறு தனது குழுவிடம் தெரிவித்துள்ளார் இசபெல். மேலும் நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டார்.

Katrina Kaif's little sister Isabelle Kaif has been announced as the new face of lakme. Isabelle Kaif who is trying to get introduced in bollywood films like her sister has got her first project signed with lakme. In the event, it was reported that Isabelle Kaif throwed tantrums and acted like a diva coming an hour late and complaining that there is too much light.