கல்லூரி மாணவிகள் கொண்டாடிய பொங்கல்- வீடியோ

  • 6 years ago
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் நிலத்தில் அறுவடை செய்த புது நெல்லிலிருந்து பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்தும், உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செய்யும் வகையில் மாட்டுப்பொங்கல் வைத்தும், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தியும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடாடப்படுகிறது.

தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத்திங்கள் முதல்நாள் தமிழர்திருநாள் என ஆண்டுதோறும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ப ங்கல் திருநாள் என எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தகைய பொங்கல் திருநாளை தமிழர் திருவிழாவாக கல்லூரிகள், பள்ளிகளில் கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பொங்கல் வைத்து தமிழர்களின் பாரம்பாரிய கலைகளான கராகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

College students Pongal celebration

Recommended