சென்னை வாசிகளுக்கு நற்செய்தி.... அடுத்த 2 நாட்களுக்கு குளிரிலிருந்து விடுதலை- வீடியோ

  • 6 years ago
அடுத்த சில நாட்களுக்கு குளிரின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் இறுதி முதல் இப்போது வரை, சென்னையின் இரவு பொழுது கடும் குளிரால் சூழப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த வெப்பம் சென்னையில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு, இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 17.6 டிகிரி செல்ஷியஸாக குறைந்துள்ளது.

இதுகுறித்து பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை என்பது வலுவானது அல்ல. நீங்கள் செயற்கைக்கோள்படத்தை காலையில் பார்த்தால் புரிந்திருந்திருக்கும், தமிழகத்தில் மழைமேகங்கள் கடற்கரைப்பகுதியை விட்டு விலகி இருப்பதை பார்க்கலாம். இப்போது முழுமையாக சென்றுவிட்டது.

தென்தமிழக கடற்கரைப்பகுதியில் நாளை மேகக்கூட்டங்கள் மீண்டும் வரும். கிழக்கில் இருந்து வீசும் காற்று காரணமாக தென் தமிழகத்தில் 11 மற்றும் 12-ந்தேதி வரைகூட மழையை எதிர்பார்க்கலாம். ஆதலால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். இந்த வலுகுறைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால், டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் மாவட்டங்கள் அதிக மழையை பெறும்.

As the clouds are back, the cold nights will take a break as the clouds will trap the heat escaping the atmosphere, says Tamil Nadu Weatherman.