தமிழ் ராக்கர்ஸை பற்றி பேசியவரை விளாசிய சித்தார்த்- வீடியோ

  • 6 years ago
தமிழ் ராக்கர்ஸை ஆதரித்து பேசியவரை நடிகர் சித்தார்த் ட்விட்டரில் விளாசியுள்ளார். மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த அவள் படம் ஹிட்டானது. இந்த படம் மிலிந்த் மற்றும் தன்னுடைய பல ஆண்டு கனவு என்று தெரிவித்திருந்தார் சித்தார்த். இந்நிலையில் அவர் படம் பற்றி ட்வீட்டினார்.

தியேட்டர்களில் அவள் படத்தை பார்க்கவில்லை என்றால் பரவாயில்லை. தற்போது நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது. இந்த நாளை நினைத்து பெருமையாக உள்ளது. பயத்தால் உங்கள் மனதை வென்ற படம் #AVAL என்று ட்வீட்டியிருந்தார் சித்தார்த்.

சித்தார்த்தின் ட்வீட்டை பார்த்த ஒருவரோ, தமிழ் ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கை விட்டது இல்ல ப்ரோ என்று கமெண்ட் போட்டிருந்தார்.

தமிழ் ராக்கர்ஸ் பற்றிய கமெண்டை பார்த்த சித்தார்த் கோபம் அடைந்து, உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம். நன்றி என்று ட்வீட்டினார்.

என்ன தான் இருந்தாலும் நீங்கள் கூறியது தவறு என சித்தார்த்திடம் ஒருவர் ட்விட்டர் மூலம் தெரிவித்தார். அதற்கு அவரோ, இதையே நீங்கள் என்ன தான் இருந்தாலும் பைரசி தவறு என்று கூறியிருந்தால் நல்லா இருந்திருக்கும் என்றார்.

Recommended