ரஜினி ஆதரவாளர்கள் என விவாதங்களில் யாரையும் குறிப்பிட வேண்டாம் - வீடியோ

  • 6 years ago
தொலைக்காட்சிகளில் ரஜினி ஆதரவாளர் என யாரையும் குறிப்பிட வேண்டாம் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வேண்டுகோள்விடுத்துள்ளார். ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அவரது அரசியல் வருகைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு பர தொலைக்காட்சிகள் அதனடிப்படையில் விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் ரஜினி ரசிகர்கள் ரஜினி ஆதரவாளர் என பலர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமீப காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்று சிலர் பங்கேற்று தங்கள் சொந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்பதையும் விவாதங்களில் தற்போது பங்கேற்று வெளிப்படுத்தும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டதில்ல என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

ஏற்கனவே தலைவர் ரஜினிகாந்த் கூறியது போல் மன்ற உறுப்பினர்கள் அன்றாடம் நடக்கும் அரசியல் விவாதங்களில் பேசாமல் கட்சி அறிவிப்பு வரும் வரை நமது நேரத்தை மன்றத்தின் கட்டமைப்பை உருவாக்க செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்து நாம் செயல்பட்டு கொண்டிருப்பதால் மன்ற உறுப்பினர்கள் யாரும் இப்படிப்பட்ட விவாதங்களில் பங்கேற்க எங்களால் நியமனம் செய்யப்படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

Rajini fan club manager Sudhakar has requested not to mention anyone as Rajini's supporter on television. He also says We have not appointed anyone to participate in the TV discussions.

Recommended